362. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய பாரதத்தினாய் வா வா வா!
வலிமை மிக்க தோளினாய் வா வா வா! நாளை பாகிஸ்தானை வெல்லுவாய் வா வா வா!
நேற்று நடந்த இந்திய-ஆஸ்திரேலிய WC T-20 அரைஇறுதி ஆட்டத்தை வென்ற இந்திய அணியைப் பற்றி தான் சொல்கிறேன்! நேற்றும் டாஸில் வென்ற தோனி, வழக்கம் போல முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய வம்சாவழியினர் நிறைந்த டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியம் களை கட்டியிருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பேரிரைச்சல் :)
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள், சேவாகுக்கு width தராமல் திறமையாக பந்து வீசினர். எனக்கு எப்போதும் போல லேசான டென்ஷன்:) சேவாக் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு, ரோஹித் அவருக்கு ரன்னராக களம் வந்தார். ஆட்டத்தின் டெம்போவை தொடக்கத்திலேயே பாதித்த இது தேவையில்லாத ஒன்று என்பது என் எண்ணம்! சேவாக் பேசாமல் retired hurt என்று களத்தை விட்டு சென்று, உத்தப்பா ஆட வந்திருக்க வேண்டும்.
சேவாகும், கம்பீரும் அவுட்டாகி வெளியேறியதில் ஸ்கோர் 41-2 (8 ஓவர்கள்). மட்டமான தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்! உத்தப்பாவும் தடவி தடவித் தான் ஆடிக் கொண்டிருந்தார். யுவராஜ் களமிறங்கியவுடன் ஆட்டம் சூடு பிடித்தது. கிளார்க் வீசிய பந்தை ஸிக்ஸர் அடித்தது வாயிலாக, ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்த ஆஸ்திரேலியர்கள் மனதில் சந்தேக விதைகளை விதைத்தார்!
இப்போது யுவராஜும், உத்தப்பாவும், நாங்கள் மெரினா கடற்கரையில் (சிறுவயதில்) ஆடிய 'Four and Sixer' ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆஸ்திரேலியப் பந்து வீச்சை சிதறடித்ததில் "நான்கு-ஆறு" மழை பொழிந்தது! 11வது ஓவரில் 19 ரன்கள், கிளார்க் வீசிய 14வது ஓவரில் நடந்த படுகொலையில் 21 ரன்கள், யுவராஜ் 21 பந்துகளில் அரைசதத்தை எட்டி விட்டார், ஸ்கோர் 125 (14.3 ஓவர்களில்) ! அதாவது, 6.3 ஓவர்களில் உத்தப்பா-யுவராஜ் ஜோடி ஈட்டியது 84 ரன்கள் (12.92 ரன்கள் பிரதி ஓவர்!!!)
சைமண்ட்ஸின் திறமையான ·பீல்டிங்கில் உத்தப்பா ரன் அவுட்! உத்தப்பா 34 ரன்கள் (3 ஸிக்ஸர்கள்). களமிறங்கிய தோனி தன் பங்குக்கு சைமண்ட்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்து, டெம்போவை நிலை நிறுத்தினார். தோனியின் ஆட்டத்தின் சிறப்பம்சம், அவரது மணிக்கட்டின் அபரிமிதமான வலிமை, அதனால், பந்து பவுண்டரி நோக்கி விரையும் வேகம்!
தனது வெறியாட்டத்தை யுவராஜ் முடித்துக் கொண்டபோது, அவர் எடுத்த ரன்கள் 70 (முப்பதே பந்துகளில், 5x4, 5x6), ஸ்கோர் 155-4 (17.3 ஓவர்கள்) ! இறுதியில் இந்தியா 188 ரன்கள் எடுத்து, தனது இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. தோனி 18 பந்துகளில் 36 ரன்கள். யுவராஜ் இறுதி வரை ஆடியிருந்தால், இன்னும் 20 ரன்கள் வந்திருக்கும்!
நமது பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினால், மேட்ச் இறுதி ஓவர் வரை செல்லும் என்று தான் எனக்குத் தோன்றியது. கில்கிரிஸ்ட்-ஹெய்டன் ஜோடி முதலில் தடுமாறினாலும் (ஸ்ரீசாந்த் மிகச் சிறப்பாக பந்து வீசினார்) 5 ஓவர்களில் 36 எடுத்த நிலையில், ஸ்ரீசாந்த் வீசிய ஆறாவது ஓவரின் முதல் பந்து கில்கிரிஸ்டின் ஸ்டம்பை சிதறடித்தது! அந்த ஓவர் முடிந்தபோது ஸ்ரீசாந்த் spell 3-1-6-1, அபாரமான பந்து வீச்சு!
ஹாட்ஜ் விக்கெட் இழந்தபோது ஸ்கோர் 68-2 (8.4 ஓவர்கள்). தேவையான ரன் ரேட் 10.7 ! ஆஸ்திரேலியாவால் இயலும் என்று தான் தோன்றியது. களமிறங்கிய சைமண்ட்ஸ், ஹெய்டனுடன் ஜோடி சேர்ந்து இந்திய பந்து வீச்சை கலகலக்க வைத்தார். சேவாக் ஒரு ஓவரில் 20 ரன்கள் கொடுத்தார்! ஆறு ஓவர்களில், ஜோடி சேர்ந்து அவர்கள் எடுத்தது 66 ரன்கள், ஸ்கோர் 134-2 (14.3 ஓவர்கள்). ஆஸ்திரேலியாவுக்கு 8 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், எனக்கு சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது! ஆனாலும் நம் அணியினர் நம்பிக்கையுடன் காணப்பட்டது ஆறுதலாக இருந்தது!
இடம் மாறினாலாவது விக்கெட் விழுகிறதா பார்க்கலாம் என்று நான் நாற்காலியிருந்து எழுந்து சோபாவில் அமர்ந்து கொண்டேன் :) ஸ்ரீசாந்தின் அந்த 15வது ஓவரின் நான்காவது பந்தில், ஹெய்டன் க்ளீன் போல்ட் !!! டர்பன் ரசிகர்களின் ஆரவாரம்! அந்த முக்கியமான கட்டத்தில், ஸ்ரீசாந்தை பந்து வீச அழைத்த தோனியை நிச்சயம் பாராட்ட வேண்டும்!
நமது அணியினரின் உடல் மொழியில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது! இந்த கட்டத்தில், பதானும், ஹர்பஜனும் நன்றாகவே பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் 17-வது ஓவரில் பதானின் பந்து வீச்சில் சைமண்ட்ஸ் க்ளீன் போல்ட்! ஸ்கோர் 156-4 (16.4 ஓவர்கள்). தேவையான ரன் ரேட் 9.9. இன்னும் எனக்கு நம்பிக்கை இல்லை! ஏனெனில், ஆஸ்திரேலியர்கள் பிரஷரில் ஆடி, பல முறை வென்றவர்கள் அல்லவா ?
ஹர்பஜன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் (யார்க்கர்) கிளார்க் ஸ்டம்பை இழந்தார்! 159-5 ! அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, ரசிகர்களின் டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தது! RP சிங் வீசிய 19வது ஓவர், ஆஸ்திரேலியர்களையும் பிரஷர் பாதிக்கும் என்பதை உணர்த்தியது :) ஆட்டத்தின் கடைசி ஓவரில், ஆஸ்திரேலியாவுக்கு தேவை 22 ரன்கள். மிக மோசமாக பந்து வீசினாலொழிய, இந்தியா தோற்க வாய்ப்பே இல்லை!
ஸ்ரீசாந்த், RP சிங், பதான் என்று அனைவருமே தங்கள் ஓவர்களை முடித்து விட்ட நிலையில், 23 வயதான ஜோகிந்தர் பந்து வீசத் தயாரானார். மிக மிக சிறப்பாக பந்து வீசி, இரண்டு விக்கெட்டுகளையும் (மைக்கேல் ஹஸ்ஸி, லீ) வீழ்த்தி, அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தந்ததில், இந்தியா 15 ரன்களில், வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியை வென்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது :)
இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில், Law of Averages நம்மைத் தீண்டி விடுமோ என்ற அச்சம் இருப்பினும், இந்த உலகக் கோப்பையில் (வென்றே ஆக வேண்டிய சூழலில்!) 3 பெரு வெற்றிகளை ஈட்டி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இவ்விளைய பாரதத்தினரை அவ்வளவு சுலபமாக யாரும் வெற்றிக் கொள்ள இயலாது என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது!
Come Home with the T20 World Cup, Team India ! We have confidence in your fearless attitude and abilities :)
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 362 ***
5 மறுமொழிகள்:
test comment !
law of average படி 3 மேட்ச்களில் தான் அடிக்க முடியும் என்பது பேட்ஸ்மேனுக்கு தான் , கடந்த உலக கோப்பையில் தொடர்ந்து தோல்வியே பெறாமல் ஆடிய அணி ஆஸ்திரேலியா.
இன்னும் சொல்லப் போனால் அந்த விதிப்படி நம்ம பேட்ஸ்மேன்கள் யாரும் இன்னும் உச்சத்தை தொடவே இல்லை. நாளைக்கு தான் அவர்கள் உச்சத்தை தொட வேண்டும்!
word verification அவசியம் தேவையா? அதை எடுக்கும் அளவுக்கு கூட பொது அறிவு இல்லையா? கமெண்ட் மாடரேஷன் இருக்கும் போது இதெல்லாம் தேவையா?
இனியவர்கு,
இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com
www.mathimaaran.wordpress.com
அன்புடன்
வே. மதிமாறன்
இனியவர்கு,
இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com
www.mathimaaran.wordpress.com
அன்புடன்
வே. மதிமாறன்
வவ்வால்,
வாங்க, கருத்துக்கு நன்றி! இன்னிக்கு மேட்ச்ல கொஞ்சம் டென்ஷன் அதிகம் தான் (எதிரணி பாக் இல்லையா ?)!
//word verification அவசியம் தேவையா? அதை எடுக்கும் அளவுக்கு கூட பொது அறிவு இல்லையா? கமெண்ட் மாடரேஷன் இருக்கும் போது இதெல்லாம் தேவையா?
//
கோபித்துக் கொள்ளாதீர்கள், word verification-ஐ நீக்கி விட்டேன் :)
எங்க, நம்ம முத்துகுமரனைக் காணும் ? அவர் தான் இந்தப் பதிவிடச் சொன்னவரே !
Post a Comment